கருத்துக் களம்: ஆசைத் தம்பியும் அறிவுடை நம்பியும் (11) - வினோத் சுப்பிரமணியன்

 graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்


                மிகவும் கவலையுடன் அமர்ந்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்  நம்பி. தம்பியும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தான். யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இப்போது அதுவல்ல பிரச்சனை. எது பிரச்சனை என்பதுதான் பிரச்சனை.

என்னடா யோசிச்சிக்கிட்டு  இருக்க?”

ஒன்னுமில்ல தம்பி.

அப்புறம் எதுக்கு இப்படி உட்கார்ந்து  இருக்க.

என்ன பண்ணுறதுனே தெரியல

என்ன தெரியல?”

எதுவும் புரியல தம்பி

ஒருவழியாக பிரச்சனை தீர்ந்தது சமாளித்துக்கொள்ளலாம் என்று நம்பி நினைக்க நினைக்க பிரச்சினைகள் கூடிக்கொண்டுதான் சென்றன.

ஒரு வரியை தட்டச்சு செய்யவே ஒரு நாள் ஆனது அவனுக்கு.

அதைத்தான் இப்போதும் யோசித்துக் கொண்டிருந்தான்.

அதையெல்லாம் பிறருக்குச் சொல்லி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.  பழகிக் கொள்வதைத்  தவிர வேறு வழி  இல்லை அவனுக்கு.

“’பார்வை இல்லாதவர்களை அதன் குறை தெரியாமல் அவர்களை  கண்ணியமாக  நடத்திய பார்வை  உள்ளவர்கள் என்பதுதானே  தலைப்பு?

என்று நேரடியாகத் தலைப்புக்கு வந்தான் தம்பி.

ஆமாம் என்றவாறு தலை அசைத்தான் நம்பி.

தூய தமிழ்.  அதில்தான் இனி தொடரவேண்டும் என்று இருவருக்கும் ஒருவாறு புரிந்துதான் இருந்தது.

தன்னைக் கண்ணியமாக நடத்தியதாக நிறைய பேர் நம்பியிடம் சொல்லியிருந்தனர்.

அதில் ஒரு சிலவற்றை தம்பிக்குக் காட்டினான் நம்பி. குழம்பினான் தம்பி.

திடீரென்று  நம்பியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான் தம்பி.

எதற்கடா சிரிக்கிறாய் மூடனே?  என்றான் நம்பி.

மூடன் நான் அல்ல நீதான். அவர்கள் மூடி இருந்ததை நான் திறக்கிறேன், நான்  திறக்கிறேன் என்று முட்டாள்தனமாகச் சென்று மாட்டிக்கொண்டது நீயா இல்ல நானா?

நான்தான். தவறைச் செய்ததும்  நான்தான் இப்போது தட்டச்சு செய்யமுடியாமல் தவிப்பதும் நான்தான் என்று தலைமேல் கையை வைத்தான் நம்பி.

அதற்குத்தான்  தமிழை தமிழாக கற்றுக்கொள்ளவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலமாகத்தான்  கற்றுக்கொள்ளவேண்டும்.

தமிழை ஆங்கிலத்தில் தட்டிக்கொண்டிருந்ததற்குத் தக்க பாடம் புகட்டியிருக்கிறான் இறைவன் என்று நம்பியைக் கிண்டல் செய்தான் தம்பி.

ஏதோ நீங்கள் கதா நாயகர்கள் போலவும் நாங்கள் எல்லாம் காமடியர்கள் போலவும் அல்லவா நடத்திக்கொண்டிருந்தீர்கள்?

ஆமாம். ஆனால் அதைச் செய்தது நான் அல்ல என்றான் நம்பி.

இப்போது விஷயத்துக்கு  வரவும்.

சரி. நான் ஒரு சில அனுபவங்களைச் சொல்கிறேன். அதுவெல்லாம் சமமாக நடத்தியதற்குள் வருகிறதா என்று பார்ப்போமா?என்று கேட்டான் தம்பி.

அப்படி என்றால் எனது பிராஜக்ட்?

அது ஒரு ஓரமாக இருக்கட்டும் என்றான் தம்பி.

சரி சொல் என்றான் நம்பி.

பார்வையற்றவர்களைக் கை பிடித்துக் கூட்டி போகும் மனிதர்களுக்கிடையே தோல் மீது  கைபோட்டு அழைத்துச் சென்ற திரு. மகேந்திரன் அவர்களின் சித்தப்பா. அவரது முகக் குறிப்பு  அறிந்து  உதவினார் என்று சொல்லியிருக்கிறார்.

சரி மேலே சொல்.

தன்னைப் பார்வையுள்ளவராகவே நடத்திய பசுபதியின் நண்பர்கள்,

மிகுந்த பசியில் யாசகம் செய்யும் நிலையில் இருந்தபோது திரு மனோகர் அவர்களுக்குப் பிரியாணி கொடுத்த வழிப்போக்கர்,

என்று தம்பி சொல்ல, இடை மறித்த நம்பி, அது இதில் வருமா? என்று கேட்க

வராது. ஆனாலும் உதவியை எழுதவேண்டும் என்று தம்பி சொல்ல, சரி. சொல் என்றான் நம்பி.

தன்னை மதுக்கடைக்கே அழைத்துச் சென்ற அவரின் கல்லூரி நண்பர்கள்,

சூப்பர்! என்று நம்பி சொல்ல,

திரு மகேந்திரணை மிதிவண்டி ஓட்டவைத்த  அவரது நண்பன் பாபு, கோவாவில் தன்னை மிகச் சமமாக நடத்திய அவரது நண்பன் ரோலன்,

திரு. பார்த்தசாரதியை  வரையவைத்த ஆசிரியர், பஜனைக்  கச்சேரியில் பாடவைத்த மனிதர்கள், குறிப்பாக தன்னை இருசக்கர வாகனம் ஓட்டவைத்து அழகு பார்த்த அவரது மாமா, ரயிலில்  பார்வையற்றவர்களின் வியாபாரத்தைத் தடுக்க விரும்பாத காவல் அதிகாரி திரு ரவி, 

அத்தனை பேர் இருந்தும் இறுதிவரை கார்த்திகேயனுடனேயே எப்போதும் நேரம் செலவிட்ட அவனது நண்பன் அன்புமணி,  திரு. ஷண்முகம் அவர்களைத் தங்க இடமில்லாதபோது தன்னுடனே சேர்த்துக்கொண்ட மூட்டை தூக்கும் தொழிலாளி, இறுதியாக பார்வையற்றவர்களாலும்  பணப் ரிவர்த்தனை செய்யமுடியும் என்று நம்பி அவருக்குச் சொல்லிக்கொடுத்த திரு. முத்துதுரை அவர்களின் மேலாளர்கள் என நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தான் தம்பி.

பெருமூச்சு விட்டபடியே நாற்காலியில் சாய்ந்தான் நம்பி.

 

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ). 

slvinoth.blogspot.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com