இசை: Top10 4.0 - கணேஷ் மற்றும் யாசர்

  கணேஷ் மற்றும் யாசர் என்ற இரு பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக ஆண்டு இறுதியில், மெல்லிசை, துள்ளலிசை திரைப்பாடல்களை வரிசைப்படுத்தி வாட்ஸ்அப்பில் வெளியிட்டு வருகின்றனர். 2018-இல் ஊடகப் பங்காளராய் அவர்களுடன் விரல்மொழியரும் கைகோர்த்திருக்கிறது.

2018-இல் அதிகபட்சமாக 7 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணனும், 4 படங்களுக்கு D. இமானும், ஜிப்ரான் மற்றும் A.R. ரஹ்மான் தலா 3 படங்களுக்கும், அனிருத், G.V. பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் தலா 2 படங்களுக்கும் இசையமைத்துள்ளனர். இந்த ஆண்டில் A.R. ரஹ்மான் 2 தேசிய விருதுகளையும், ஷாஷா திரிபாதி ‘வான் வருவான்’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றனர்.

எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி, எழுத்தாளர் பாலகுமாரன், நடிகை ஸ்ரீதேவி, நடிகர் கோவை செந்தில், நடிகர் வெள்ளை சுப்பையா, இயக்குனர் R. தியாகராஜன், தயாரிப்பாளர் M.G. சேகர், பாடகி M.S. ராஜேஸ்வரி ஆகியோர் 2018-இல் கோலிவுட் இழந்த பொக்கிஷங்கள். இப்படி, பல புள்ளி விவரங்களையும் தருகின்றனர் இந்த இளைஞர்கள். சரி! இவர்கள் வரிசைப்படுத்திய 2018-இன் ‘டாப் 10’ பாடல்கள் என்னென்ன?


துள்ளலிசை டாப் 10: (இடம் – பாடல் – படம்)

  • 10. புது மெட்ரோ ரயில்சாமி-2.
  • 9. வா மச்சி வாடா மச்சி - ஒரு குப்பை கதை.
  • 8. வெள்ளக்கார வேலாயி - கடைக்குட்டி சிங்கம்.
  • 7. ஒரு குச்சி ஒரு குல்பிகலகலப்பு-2.
  • 6. ரௌடி பேபிமாரி-2.
  • 5. வாயாடி பெத்தபுள்ள - கனா.
  • 4. கல்யாண வயசு - கோலமாவு கோகிலா.
  • 3. சொர்க்கமா சொர்க்கமா - குலேபகாவலி.
  • 2. ஒருவிரல் புரட்சி - சர்கார்.
  • 1. சொடக்குமேல சொடக்கு - தானா சேர்ந்த கூட்டம்.

மெல்லிசை டாப் 10: (இடம் – பாடல் – படம்)
  • 10. நானாகிய நதி மூலமே - விஸ்வரூபம்-2.
  • 9. வா ரயில் விட போலாமா - பரியேறும் பெருமாள்.
  • 8. உயிர் உருவாக - இரவுக்கு ஆயிரம் கண்கள்.
  • 7. குறும்பா - டிக் டிக் டிக்.
  • 6. சண்டாளி - செம்ம.
  • 5. நெஞ்சில் மாமழை - நிமிர்.
  • 4. உன்ன விட்டா - சீமராஜா.
  • 3. ஹே பெண்ணே - பியார் பிரேமா காதல்.
  • 2. நீல மலைச்சாரல் - செக்கச் சிவந்த வானம்.
  • 1. காதலே காதலே - 96. 

இவர்கள் தொகுத்து வழங்கும் அழகையும், மேலும் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கிக் கேளுங்கள்.
***

எழுத்தாக்கம்: பொன். சக்திவேல்

தொடர்புக்கு: ithutop10@gmail.com

1 கருத்து: