கவிதை: புத்தாண்டே வருக! - சங்கரநாராயணன்

புத்தாண்டே வருக
புதுப்பொளிவை தருக
அன்பும் அருளும் அகிலம் பரவ
அறிவே அணையா விளக்காய் ஒளிர
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஆய்வு செய்வோர் அவனியில் செழிக்க
மனித ஆற்றல் மங்காது திளைக்க
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

இன்பமே எல்லார் உள்ளத்தும் பொங்க
இறக்கமே மனதினில் நீங்காது தங்க
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஈ என்று கேட்போர் இல்லாது போக
ஈடில்லா ஆண்டு இவ்வாண்டு என்றே தோன்ற
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

உவகை என்றும் உண்மையாக
உண்மை என்றும் உலகை  ஆள
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

எவரும் அடிமை இல்லை இங்கு
எல்லோரும் சமமாக ஆகட்டும் இங்கு
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஏற்றம் ஒன்றே இதைய துடிப்பாக
ஏழைக்கென்றும் அதுவே பிடிப்பாக
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஐய்யன் நூலே ஆண்டெல்லாம் பரவ
ஐம்புலன் என்றும் அமைதியில் அடங்க
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஒப்பில்லா உழவை உலகோர் போற்ற
ஒற்றுமையாய் அதை உயர்த்தியே பிடிக்க
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஓதி உணர்ந்து உலகோர் தெளிய
ஓய்வின்றி என்றுமே உழைக்க
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஔவியம் பேசா மனிதரே காண
ஔவையின் சொல்லே அமுதம் ஆகுக
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

கற்பனை சாதி கட்டு அவிழ
காணும் கணவு நினைவாய் மாற
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

மண்ணில் பெண்ணின் மாட்சிமை ஓங்க
மறையா மதவெறி மனிதனை நீங்க
புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

ஆங்கில புத்தாண்டே வருக
இந்த அனைத்தையும் எங்களுக்கு தருக.


(கவிஞர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இசை ஆசிரியர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக