இசை: டாப் 10 பாடல்கள் - கணேஷ் மற்றும் யாசர்

ஆண்டு இறுதி என்றாலே, டாப் 10 பாடல்கள் நம் நினைவிற்கு வரும். மெல்லிசை, துள்ளலிசை என இருவகை பாடல் போல இணைந்தே டாப் 10 பாடல்களை கடந்த 5 ஆண்டுகளாக தொகுத்து வாட்ஸ்அப் வழியாக வெளியிட்டு வருகிறார்கள் கணேஷ் மற்றும் யாசர் என்ற இரு பார்வையற்ற இளைஞர்கள். இவர்கள் பாடல்களுக்கு இடையே புள்ளிவிவரங்களை  அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒலிக் கலவையிலும் நேர்த்தி காட்டியிருக்கிறார்கள்.

தங்களுக்கென ஒரு வாசகப் பரப்பை வைத்திருக்கும் இவர்கள், அந்த ஆண்டில் ஒரு துறையில் உச்சம் தொட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரை  இந்நிகழ்வின் வாயிலாக அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பார்வையற்றோர் சிறுபான்மையினருள் சிறுபான்மையினராக இருக்கிறோம். எனவே ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவை.  அதனை நடைமுறைப்படுத்தி, இவ்விரு இளைஞர்களும் பார்வையற்றோர் சமூகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

இவர்கள் தொகுத்து வழங்கும் அழகையும், மேலும் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கிக் கேளுங்கள்.
இவர்களது முயற்சி பரந்த அளவில் கவனம் பெற, இதனை பல தளங்களில் பகிருங்கள். உங்கள் கருத்துக்களையும், ஆண்டு  இறுதியில்; அந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் உங்கள் மனம் கவர்ந்த பாடல்களையும்
ithutop10@gmail.com
என்ற இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

தொகுப்பு: பொன். சக்திவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக