தொழில்நுட்பம்: பார்வையற்றோர்களின் கணினி மற்றும் மின்னூல் பயன்பாடு - க. பிரகாஷ்

            ஆரம்ப காலகட்டங்களில் கணக்கிடுதல் முறையில் இருந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் இம்முறையினை எளிமைப்படுத்துவதற்காக கணினியானது தோற்றம் பெற்றது.  இப்போது இருக்கும் சிறந்த வடிவத்தினை அன்று கணினியானது பெற்றுவிடவில்லை.  பல கட்டமைப்புடன் கூடிய படி நிலைகளைத் தாண்டி கணினியானது ஒரு முழு வளர்ச்சி அடைந்துள்ளது.
            கணினி என்றாலே பார்வை-பார்த்தல் காட்சி-வெளிச்சம் என்று அதன் அடிப்படை தன்மையைச் சொல்லிவிடலாம். இப்படி இருக்க பார்வையுடையவர்களால் மட்டுமே இயக்கப்பட்டு வந்த கணினியைப் பார்வை குறைபாடுடைய நபர்களால் இயக்கமுடியுமா?  அவர்கள் இயக்குவதற்கான மென்பொருள்கள் வழி கணினியினைக் கட்டமைக்க முடியுமா?  இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக அறிவியல் அறிஞர்கள் பலர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றபடி கணினியினைக் கட்டமைத்தனர்.
            திரைப்படிப்பான் (Screen Reader) கருத்தாக்கம் தான் மாற்றுத் திறனாளிகள், கணினியினை பயன்படுத்துவதற்கு உதவுகின்றது.

திரைப்படிப்பான்

(Screen Reader)

            ஆங்கிலத்தில் (Screen Reader) என்று அழைக்கப்படுகின்ற திரைப்படிப்பான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பு கருவி (Reading Tool) ஆகும்.  திரையில் உள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும்  படிமங்களை (Image) வாசிக்க  (Screen Reader) பயன்படுகின்றது.  இந்த திரைப்படிப்பான் ஆனது மென்பொருள்களின் வழி இயங்குகின்றது.  பலதரப்பட்ட திரைப்படிப்பான்களும் அதற்கு உதவி செய்யும் வாசிப்பு கருவிகளும் (Screen Reader and Support reading tools) இருந்த போதிலும், இருக்கின்ற போதிலும் பரவலாக அனைவரும் பயன்படுத்துவது இவை இரண்டு திரைபடிப்பான்கள் ஆகும்.
 1) JAWS Job Access with speech
               2) NVDA Non Visual Desktop Access

            இதில் Jaws-கட்டன மென்பொருள். NVDA- கட்டற்ற மென்பொருள். NVDA குழுவிற்குத் நன்கொடையாக  தொகை செலுத்தலாம்.  ஆனால் ஜாசை கட்டாயமாக தொகை* செலுத்தி மட்டுமே பெற முடியும்.

Jaws

            Freedom scientific என்ற நிறுவனம்  ஜாஸ் மென்பொருளை உருவாக்கியது.  பார்வை உடையவர்கள் எப்படி கணினியினை இயக்குகின்றார்களோ அதுபோலவே பார்வைக்குறைபாடுடையவர்களாளும் கணினியினை இயக்க முடியும்.  Jaws இல் 50-க்கும் மேற்பட்ட மொழிகள் செயல்படுகின்றன.  இதன் துணை வாசிப்பு கருவியாக Eloquence எனும் TTS பயன்படுகின்றது. TTS தான் Screen Reader - க்கு துணைக் கருவியாகும். இது திரையில் இருக்கும் எழுத்தினை ஒலியாக மாற்றுகிறது.
            முழுக்க முழுக்க keyboard comments உடன் Jaws -இன் உதவியோடு கணினியினை இயக்க முடியும்.  இதற்கு (speaker) ஒலிபெருக்கி கட்டாயமாக தேவைப்படுகிறது.  இதில் பிரதான மொழியாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செயல்படுகிறது.  இந்த Jaws - இன் தொகை 50000 த்திலிருந்து 80000 வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது.  தனக்குத் தேவைப்படும் Supporting files ஏற்ப Jaws  Installation செய்யப்படுகிறது.

NVDA

            2004 - இல் nvda  என்ற திரைப்படிப்பானினை உருவாக்கத் தொடங்கினார்கள். 2006- ம் ஆண்டின் பிற்பகுதியில் NVDA முழு வளர்ச்சி அடைந்தது.இதுவும் Jaws போல கணினியில் செயல்படும் சிறந்த திரைப்படிப்பான் ஆகும்.  தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் போன்ற குறிப்பிட்ட மொழி கட்டமைப்புகளை தன் கட்டமைப்பினுள் கொண்டுள்ளது. 70க்கும் மேற்பட்ட மொழிகள் NVDA வின் பொது அமைப்பிலும் 80க்கு உட்பட்ட மொழிகள் NVDA வின் Voice அமைப்பிலும் இடம் பெற்றுள்ளன. இதன் செயல்பாடு எளிதில் இயக்க கூடியதாகவும் இருக்கும்.  espeak இதனுடைய Text to update voice ஆகும்.  தற்போது 2017.4update செயல்பட்டு வருகிறது.  இது ஒரு open source software ஆகும்.  மென் பொருள் இயக்க உரிமையுடைய எவரும் இதனை develop செய்து வெளியிடலாம்.  இதனுடைய supporting files - ஆக ADDONS பயன்படுகிறது. இவைகள் அனைத்தும் NVDA Developers வெளியிடுவதில்லை வேறு third parties வெளியிடுகின்றனர்.

Screen Reader

மென்பொருள்கள்

Ø  JAWS
Ø  NVDA
இவை அனைத்தும் screen reader.  இதனுடைய support TTS - ஆக 
Ø  Eloquence
Ø  E-speak
Ø  Google TTS
Ø  Vocalizer TTS
Ø  Sappy voice
Ø  Micro soft voice
            இதனோடு மேலும் பல 3rd parties TTS-களும் பயன்படுகின்றன.

மின்னூல் பயன்பாடு

            பார்வைமாற்றுத்திறனாளிகள் மின்னூல்களையும் பயன்படுத்திவருகின்றனர். மின்னூல்களின் பல வடிவங்களான word, text, HTML, pdf, webpage, E-pub, E-Mob போன்ற மின்னூல் வடிவங்களை screen reader வழியாக எளிதில் படித்து வருகின்றனர்.
            இதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கென பலதரப்பட்ட Programming tools பயன்படுகின்றது. பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கென பலமின்னூல் மையங்களும் செயல்படுகின்றன.  அவை WhatsApp, e-mail, Facebook, webpage, drop box, blocks.
            இதில் தமிழ், ஆங்கிலம் மொழிபெயர்ப்பு மின்னூல்களும், தமிழ்மற்றும்  ஆங்கில மின்னூல்களும் படிக்கக்கிடைக்கின்றன.
            Book share      
            வள்ளுவன் பார்வை
            வாசிப்போம் block போன்றவை குறிப்பிடத்தகுந்தது.
மின் பயன்பாட்டில் உள்ள நன்மைகள்
            அனைவரைப் போலவும் எளிதில் இயக்க முடிகிறது.
            தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவுகிறது.
            வாசிப்பு எளிமையானதால் வாசிப்பு பழக்கம் அதிகமாகிறது.
            தொழில்நுட்பம் குறித்த அறிவு பெருகுகிறது.
            கிடைப்பதற்கு அரிதான புத்தகங்களையும் எளிதில் மின்னூல் மையங்களின் வழி பெற்றுக்கொள்ள முடிகிறது.
            வாசிப்பாளர் சிக்கல் தீர்வுக்கு வருகின்றது.
சிக்கல்கள்
            திரைபடிப்பான் வழி படிப்பதால் சில இடங்களில் வாசிப்பு சிக்கல் ஏற்படுகின்றது.
            மின்னூல் ஆக்கப்பட்டுள்ள font பொறுத்தே திரைப்படிப்பான் இயங்குகிறது.
            எல்லா மின்னூல்களையும் இயக்குவது கடினமாக உள்ளது.
            PDF வகைப்பட்ட தமிழ் வழி மின்னூல்களை படிப்பதற்காக முறையான கருவிகள் இன்றுவரை முறைப்படுத்தப்படவில்லை.  
            OCR ன் பயன்பாடு ஆங்கில மொழிக்கே சிறப்பாய் செயல்படுகிறது.
            தமிழ் மொழிக்கென OCR இருந்தாலும் முழுமையாக துணை செய்வதில்லை.
            PDF files படிப்பதற்கு கடினமாக உள்ளது.
            பிறவகைப்பட்ட மின்னூல்களை எளிதில் படிக்க முடிந்தாலும் தேடுதல் சிக்கல் காணப்படுகின்றது.
            PDF image - ல் அமைக்கப்படுகின்றது. அவற்றைப் படிக்க ஆங்கில மொழி TTS படிப்பான்களே முழுமையாக துணை செய்கிறது.
டெய்சி மின்னூல்கள்
            பார்வைமாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் பிற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் டெய்சி வகை மின்னூல்கள் பயன்படுகின்றன.  இதை படிப்பதற்கேன டெய்சி TTS செயல்படுகின்றது.  Book share மின்னூல் மையம் டெய்சி வகை மின்னூல்களை பதிவேற்றம் செய்கின்றன.
மின்னூல் உருவாக்கிகள்
            இணையத்தில் பலவகை மின்னூல்கள் வெளியிடப்பட்டாலும் பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கென மின்னூல்களை குறிப்பிட்ட சிலரே வெளியிடுகின்றனர். அவர்களுள் Book share, வாசிப்போம் blocks ஆகியவற்றை நடத்துவோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
ஆங்கில மின்னூல் படிப்பான்கள்
Ø  Curs while
Ø  Adobe reader
Ø  All type pdf reader
Ø  All type e-book reader
Ø  All reader
தமிழ் மின்னூல் படிப்பான்கள்
Ø  Accessible reader
Ø  OCR scanner
தமிழ் மின்னூலைப் படிப்பதற்குச் சில  Android செயலிகள் பயன்படுகின்றன அவை.
Ø  Smart lens
Ø  Be my eyes
தேவைகள்
            தமிழ் மின்னூல்களைப் படிப்பதற்கேற்ற செயலிகளை உருவாக்க வேண்டும்.
            தமிழ் OCR முறைப்படுத்தப்பட வேண்டும்.
            இக்காலத்தில் வெளியாகும் இதழ்கள் இலக்கியங்கள் போன்றவை Hardcopy வெளியிடப்படும் போதே softcopy வெளியிடப்பட வேண்டும்.”– (மு.மகாலிங்கம்)
            OCR Scanner முறைப்படுத்தப்பட வேண்டும்.
            தமிழ் மொழியில் காணப்படும் font வகைகளை ஏற்றபடி அமைக்க வேண்டும்.” - (மு.மகாலிங்கம்)
            தற்போது திரைப்படிப்பான்களில் இயங்கும் font முறைப்படி மின்னூல்கள் உருவாக்கப்படவேண்டும்.
            PDF  வகை மின்னூல்களை படிக்க தமிழில் முறையான ocr  கொண்டு வரவேண்டும்.
            பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் மின்னூல் பயன்பாட்டிற்கேற்ப மின்னூல்களைத் தயாரிக்கக் கேலிபர் எனும் மென்பொருள் பயன்படுகிறது.  இதில் pdf, word, Text, HTML, e-pub, mob, டெய்சி webpage போன்ற மின்னூல் வடிவங்களை அமைக்க முடியும்.” IT professional ஆன Ravikumar என்பவர் பார்வையற்றவர்களுக்கான மின்னூல்களை உருவாக்கிவருகின்றார்.  இவர் உருவாக்கிய மின்னூல்கள் அனைத்தையும் vaasippom.blockspot.com வழியாக கணக்கு தொடங்கி பெற்றுக்கொள்ள முடியும்.




கட்டுரையாளர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்றுவருகிறார்.
இவர் மாற்றுத்திறனாளியல்ல.
தொடர்புக்கு: kprakashkpd@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக