உலகமே தற்போது ஓர் அசாதாரண சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாக நாம் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கிறோம். அதே நேரத்தில், பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நாம் இயல்பான தடையோடு, இந்த ஊரடங்குத் தடையையும் தாண்டி மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
சக பார்வை மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க வாட்ஸப் குரல் பதிவுகள் வழியே பலரும் கரம் கோர்க்கிறார்கள்; இயன்றவர்கள் நேரில் சென்று உதவிவருகிறார்கள். மற்றவர்கள் இணைய வழி வங்கிச் (Net banking) சேவையின் மூலம் பயனாளிகளுக்குத் தங்களால் முடிந்த பண உதவியை வழங்கி வருகிறார்கள். Zoom செயலியின் மூலம் கூட்டம் நடத்தி தங்களது நீண்டகால செயல்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடுகிறார்கள்.
பொது இடங்களுக்குச் சென்றாலே அருகில் இருப்பவர்களோடு கூட தொடர்பு ஏற்படுத்துவதில் தடைகளைக் கொண்ட பார்வை மாற்றுத் திறனாளிகளால் வீட்டிற்குள் இருந்துகொண்டே இத்தனையையும் சாதிக்கவைத்தது எது? விடை உங்களுக்கே தெரியும். ‘அறிவியல் தொழில்நுட்பம்’ .
ஆம். அறிவியலால் எல்லாம் முடியும். உலகமே அஞ்சி நடுங்கும் இந்தச் சிற்றுயிரைக் கண்டறிந்ததும், அதன் செயல்பாடுகளைக் குறைந்த அளவேனும் மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவியல்தான். நம் பிரச்சனைகளை அறிந்து, நம்மைப் பிறருடைய அன்பான கைகளைப் பற்றிக்கொள்ளத் துணை புரியும் அறிவியலால் இந்தக் கொரோனா சிக்கலிலிருந்தும் இவ்வுலகை மீட்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.
சக பார்வை மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் விரல்மொழியரின் வாழ்த்துகளும், நன்றியும். உங்கள் ஒவ்வொருவரோடும் விரல் பிடித்து நடக்க விரும்புகிறது விரல்மொழியர்.
வாசகர்களே!
இந்த இதழ் கொரோனா சிறப்பிதழாக மிளிர்ந்திருக்கிறது. கொரோனா காலம் பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பல்வேறு கோணங்களில் அலசுகிறது இவ்விதழ். இச்சிறப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் ராகரதம், அரசியலில் நாம் ஆகிய தொடர்கள் இடம் போதாமை காரணமாக இடம்பெறவில்லை. அடுத்த இதழில் தொடர்கள் தொடர்ந்து வரும்.
இதழைப் படித்துப் பயன்பெறுவீர்.
நம் பிரச்சனைகளை அறிந்து, நம்மைப் பிறருடைய அன்பான கைகளைப் பற்றிக்கொள்ளத் துணை புரியும் அறிவியலால் இந்தக் கொரோனா சிக்கலிலிருந்தும் இவ்வுலகை மீட்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.
பதிலளிநீக்குGreat lines indeed!
மிகச் சரியாக சொன்னீர்கள் அறிவியல் இல்லையென்றால் நம் ஆற்றலை வெளிக்கொணர்வது மிகவும் கடினம்
பதிலளிநீக்குஉன்மைதான் அறிவியல். நமக்கு பெரும்பான்மையான கதவுகளை திரந்துவிட்டிருக்கின்றது. பொது சமூகம் இந்தச் சூழலை எப்படி கடக்கப்போகிரோம் என்று சிந்தித்துக்கொண்டிறுந்த வேலையில். நம்மவர்கள் அறிவியல் கரம் பிடித்து மிக அணாயசமாக கடந்துக்கொண்டிருக்கின்றோம். அத்தோடு நில்லாமல் பிரரையும் கடக்க உதவிக்கொண்டிருக்கின்றோம்.
பதிலளிநீக்குவணக்கம் கருணா சிறப்பு இதழை வெளியிட்ட குழுவிற்கு வாழ்த்துக்கள் நாம் மாற்று திறனாளிகள் என்ற வார்த்தை இப்போது மீண்டும் உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது அருகில் இருப்பவர்களை முகத்தை பார்த்து இனம் காணமுடியாது எனவே நமக்கு எதுவும் தெரியாது உலகம் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற புற பார்வையாளர்கள் இனிமேலாவது நம்மைப்பற்றி புரிந்து கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவே நான் கருதுகிறேன் நாம் செய்த இந்த நிகழ்வுகளை இந்த மின்னிதழை மூலம் நீங்கள் பதிவு செய்கிறீர்கள் நானும் அதை பல புறப்பார்வை உள்ளவர்களின் உடைய பல குழுக்களில் பகிர்ந்து அதை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அவர்கள் படித்து விட்டு நீங்களும் இப்படி எல்லாம் இருக்கிறீர்களா என்று வியந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவே இந்த இதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றிஅது மட்டுமல்ல அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கிறது என்பது கண்டு புறப் பார்வையாளர்கள் மிகவும் வியக்கின்றனர் நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள் தான் எங்களை போல இல்லை என்றாலும் மாற்று வழியில் உங்கள் திறமைகளை நீங்கள் காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்கள் எனவே தொடர்ந்து செயல்படுவோம் நன்றி
பதிலளிநீக்குகருத்தளித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.
பதிலளிநீக்கு