கவிதை: அம்மா! - தீனா எழிலரசி


graphic குழந்தையை மார்போடு அணைத்திருக்கும் தாய்

எட்டிப் பார்த்தேன்
அழகிய நிலவொளி சாளரத்தின் வழியே
ஏகாந்த நினைவுகளில் எனை அணைத்தன
தாயின் கரங்கள்.

அவள் பாடிய தாலாட்டு முடியவில்லை.
பிஞ்சுக் கரம் கோர்த்து நடை பழகிய அந்த நினைவுகள்
தடங்களாய் எனக்குள்ளே.

வறுமை வாட்டினாலும்
பெருமித உணர்வுகளைக் கற்பித்த
என் முதல் ஆசிரியை அவள்.

துணிவையும், அறிவையும்,
நெஞ்சில் உறத்தையும்
கற்றுத் தந்த தந்தையின் நினைவுகள்.

எப்போதும் என் செவிகள்
சாலையில் ஓடும் பேருந்து ஓசைகளையே கேட்டுக்கொண்டிருக்கும்
அவளின் வருகைக்காக.
அவள் ஊட்டும் உணவுக்காகவும்,
அவள் சூட்டும் முழப் பூவுக்காகவும்.

என்னைக் கருவில் சுமந்தபோதே
என் வாழ்வின் முன்னேற்றங்களைத்
தன் கனவுகளில் சுமந்தவள்.
நான் வாழத்
தன்னையே வதைத்துக் கொண்டவள்.

எத்தனை இரவுகளின் உறக்கங்கள்
அவள் கண்களைக் கடந்து போனதோ?
எனது சுகமே அவளின் சிரிப்பு.

அதே தாய்மையை
இன்னும், இன்றும் அந்தக் கண்களில் பார்க்கிறேன்.

என்னைப் பார்த்த அந்தப் பரிவோடு
எனக்குப் பாடிய தாலாட்டை.
இப்போதும் பாடுகிறாள்
என் குழந்தைக்காக.

உயிரைத் தந்து
உறவைத் தந்த
அம்மா நீ வாழ்க!
உலகம் உள்ளவரை.

வாழ்த்த வயதில்லை .
வார்த்தை உண்டு.

(கவிஞர் இராணிப்பேட்டை மாவட்டம் அமூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்)
தொடர்புக்கு: dheenaezhilarasi@gmail.com

6 கருத்துகள்:

  1. ஆண்டுகள் பல ஆனாலும் ஆகச்சிறந்த மகத்துவத்தை கொண்டு மனித குலத்தை தழைத்து ஓங்கச் செய்யும் அம்மாவின் சிறப்புக்களை அழகாய் சொன்ன விதம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா பார்வை மாற்றுத்திறனாளிகளின் கவிதைகள் எதுகை மோனை மொன்னைகளிலிருந்து சற்று விடுபடத் தொடங்கியிருக்கிறது மகிழ்ச்சி. வாழ்த்துகள் வளர்த்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆயிரம் வகையான உணவுகளை அதிக விலை கொடுத்து உண்டாலும், ஏன் அமிர்தமே கிடைத்தாலும் அது அன்னை ஊட்டும் ஒரு பிடிச் சோற்றுக்கு ஈடாகாது.
    அத்தகைய அன்னையின் நினைவுகளை அழகாய் வடித்தெடுத்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மாதா, பிதா, குரு, தெய்வம். எண மொத்தவடிவமும் ஒத்த உருவமாய் நித்தம் காண்பது அன்னை. என கவிதை சொன்ன உங்கலுக்கு பாறாட்டுக்கள். தொடருங்கள் உங்கலது இளக்கியப்பனியை.

    பதிலளிநீக்கு
  5. ஒரு பார்வையற்ற குழந்தை. அவல் அம்மாவை எப்படி உணருகின்றாள் என்பதை. மிக அழகாய் எழுத்தின் வழியே வடித்துள்ளீர்கள். உங்களுக்கும் நீங்கள் சொல்லிய கடைசி வரியை நான் கூருகின்றேன். வாழ்த்துக்கள் கூர வவயதில்லை. ஆணாள், வார்த்தை உண்டு. வாழ்த்துக்கள் கவிஞரே!

    பதிலளிநீக்கு
  6. ஜெயராமன் தஞ்சாவூர்6 ஜூன், 2020 அன்று 6:35 PM

    தன் தாயின் அருமை, பெருமைகளை
    தான் தாயாகும் போது,
    உணர்ந்ததன் விளைவாக,
    தன் உள்ள கிடைக்கைகளைக் கவிதையாக
    படைத்திருக்கும் கவிஞருக்கு

    வாழ்த்துக்கள். , Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...

    பதிலளிநீக்கு