கொரோனா: உலக அரங்கம் உயிரை உறிஞ்சி எடுக்கும் பல கொடிய நோய்களைச் சந்தித்திருக்கிறது. எண்ணற்ற தொற்றுகளை எதிர்கொண்டிருக்கிறது. இப்பொழுது பரவிக் கொண்டிருக்கும் நான் ஒன்றும் புதியவன் அல்ல. நான் கொடுக்கிற குடைச்சலும் அறியாததல்ல. மனித வரலாற்றில் கொள்ளை நோய்களில் வரிசையில் புதிதாக காணக் கிடைப்பவன்தான் நான்.
அமெரிக்காவை நடுங்கச் செய்தேன்; ஐரோப்பாவைப் புரட்டிப் போட்டேன், பரவலாய் அறியப்படுகிறேன் இப்படியெல்லாம். உலகமும் நம்புகிறது இதற்கெல்லாம் நானே காரணம் என்று. இல்லை; உறுதியாக இல்லை.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தேன். அந்த நாடு அஞ்ச வேண்டும் என்பதற்காக அல்ல; அங்கு ஆபத்தான நிலையில் மருத்துவத்துறை இருக்கிறது என்பதை உலகறியச் செய்யவேண்டும் என்பதற்காக.
ஐரோப்பாவைத் தாக்கினேன். அதன் செல்வச் செழிப்பைச் சிதைக்கவேண்டும் என்பதற்காக அல்ல; மனிதநேயத்தை மறுதலிக்கும் செல்வச் செழிப்பால் என்ன பயன் என்பதை உணர்த்துவதற்காக.
உன்னால் ஏன் இந்தக் கொடுமை? ஊரை உறையச் செய்து அப்பாவிகளை அழித்து ஒழிக்கிற ஆணவச் செயல்? என்பீர்கள்.
கொண்டுசெல்லப்பட்டேன். ஆரம்பத்திலேயே என்னை சீன தேசத்தின் ஊஹான் மாகானத்திலேயே அழிக்காமல், நாடு நாடாக, நான் ஆபத்தானவன் என்பதை அறியாமல் மக்களால் கொண்டு செல்லப்பட்டேன்.
பொறுப்பற்ற தன்னிலை விளக்கம் என்பீர்கள். எனது தன்னிலை விளக்கத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது, தாய் தந்தை சண்டை போட்டு பிரிந்துவிட்டால் வலுக்கட்டாயமாக இங்குமங்குமாய் பந்தாடப்படும் பச்சைப் பிள்ளையைப் போல.
என்னை இரக்கமற்றவன் என்கிறார்களே! இந்த இரக்கமற்றவன் பரவும்படி நேர்ந்ததைச் சீர்தூக்கிப் பார்த்தால் தெரியும், எனது பரவலைக் காட்டிலும் என்னை வைத்துப் பரவிய அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்று.
நான் வேகம் எடுத்தபோது தடுத்து ஆட்கொள்ளும் தடுப்பூசிகளைச் சந்திக்கவில்லை;
அலட்சியப்படுத்திப் பேசும் உலக ஆட்சியாளர்களின் ஆணவச் சொற்களையே சந்தித்தேன். விலங்குகளை அதிகம் வேட்டையாடவில்லை நான்; மனிதர்களையே மரணத்தின் முன் மண்டியிடச் செய்தேன். நான் எங்கு பிறந்தேன் என அமெரிக்காவும் சீனாவும் வல்லரசு யுத்தம் நடத்தி 50 ஆண்டுகளுக்குள் அறிவிக்கும் முன்னர், கேளுங்கள் நான் சொல்ல விரும்பும் சில செய்திகளை.
சீன தேசத்திலே ஊகான் என்கிற வர்த்தக நகரத்தில் வேர் விட்டவன் நான். முளைத்தது ஓரிடம்; மூர்க்க தனமாய் இன்று தொற்றிக் கிடப்பதோ பலரிடம்.
கொள்ளை நோய்களுக்கு நான் என்ன புது வரவா? இத்தாலி தேசம் என்னை இறக்குமதி செய்தது. பலர் உயிர் துறக்க அதன் ஆபத்தை அறுவடை செய்தது.
ஆபத்து நிலையில் இருக்கும் ஊனமுற்றோரைச் சந்திக்க நேர்ந்தது. சட்டங்கள் இருந்தும், அதை நிர்வகிக்க அதிகாரிகள் ஆயிரம் இருந்தும், நலிவடைந்து நிர்கதியாய் நிற்கும் மாற்றுத்திறனாளிகளைக் கைவிட்டு நிற்கிறதே, எண்ணற்ற அரசுசார் அமைப்புகள். அவற்றை எண்ணிப் பாருங்கள். அவர்கள் கைவிடப்பட்டிருப்பதை கண்கூடாகக் கண்டேன். பசியால் வாடுவதைக் கண்டு நானே பரிதாபம் கொண்டேன். நான் கூட அவர்களை அண்ட வில்லை என்கிற அவச்சொல் வந்து விடுமோ என்று அஞ்சி, சில மாற்றுத்திறனாளிகளை மட்டும் தொற்றி அரசின் கவனம் பெறச் செய்ய முயன்றேன்; இறுதியில் தோற்றுத்தான் போனேன்.
அவர்களின் பெயரோ மாற்றுத்திறனாளி. இரக்கத்தை ஒன்றுதிரட்டி பரிதாபம் கொள்ளச் செய்யும் பாசாங்குச் சொல். அவர்களுள் தற்காலிகப் பணி செய்தும், சிறுதொழில் புரிந்தும், வியாபாரம் செய்தும், சட்டத்தின் பயனால் அரசு வேலை பெற்றும் பலர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் நான். இவற்றுள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பலர் அவர்களுக்குள் உதவுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். ஐநாவின் பிரகடனங்களால் ஓரளவுக்குக் கவனம் பெற்றவர்கள் இன்று நான் பரவும் இத்தகைய நாட்களில் முறையாக கவனிக்கப்படுவதில்லை.
ஊனமுற்ற ஏழைகளின் கைகளிலோ வெறும் அடையாள அட்டை; பெயரளவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம். அவற்றால் அவர்களுக்கு இப்பொழுது பயனேதுமில்லை. இவை இருந்தும் கையேந்தி நிற்கின்றனர் பலர், அவர்களுக்காகக் குரல் கொடுத்து நீதி கேட்கின்றனர் சிலர். இருந்தும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.
இவர்களுள் பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்கொண்டு ஆபத்து நிலையில் இருக்கும் பாலகர்களின் வாழ்வைக் குறித்து கேள்வி எழுப்பினால், “எல்லோருக்கும் போல தான் இவர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று பொறுப்பற்று இருப்பதைப் போட்டுடைத்திருக்கிறாரே இந்தத் தமிழ் மண்ணில் பள்ளிக் கல்வியைப் பரிபாலனம் செய்யும் அந்த காப்பாளர். அதையும் பேட்டி கொடுத்த இடத்திலிருந்து யாருமறியாமல் கண்ணுற்றேன்.
அதுமட்டுமா.
நான் அதிகம் பரவி அச்சுறுத்தாவிட்டால் புலம்பெயர்ந்த தொழிலாளிகளைத் துச்சமென நினைத்துத் தவிக்க விட்டிருப்பார்கள் இந்த நாட்டை ஆளும் கோட்டைத் தளபதிகள்.
குடிமக்களைக் காக்க மக்களால் முடிசூடியவர்கள் முன் வந்தார்கள். காக்கிற அந்தச் சேவைக்குக் கூலியாய் தமிழ் பெண்களின் தாலியைக் கேட்டார்கள், கணவன்மார்களை குடிக்கச் செய்வதன்மூலம்.
தலைமை இடத்தில் இருக்கிறேன் என மார்தட்டிக் கொள்ளாமல் என்னை மண்ணைக் கவ்வச் செய்திருக்க வேண்டும் அந்த வெள்ளை மாளிகைக் காரர். அதைச் செய்து முடிக்காமல் எவனோ உழைத்து கண்டுபிடிக்கும் மருந்துக்குக் காப்புரிமை பெற்றுக் கள்ளா கட்ட களத்தில் இறங்கினார் அவர். ஆரம்பத்திலேயே சமூக விலகலை நடைமுறைப்படுத்தி இருந்தாள் அமெரிக்காவில் உயிரோடு இருந்திருப்பார்கள் பலர். நான் ஊடுருவும் உடல்களில் நோய் எதிர்ப்பு இல்லையென்றால் தின்று கொன்று விடுவேன் எனத் தெரிந்தும், கூட்டமாய் திரிந்தனர் நியூயார்க்கின் அப்பாவி பிரஜைகள். என்னைப் போன்ற தொற்று வைரஸ் பரவும் நாட்களில் பல மனித உயிர்கள் சிட்டாய் பறந்து விடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அப்படித்தான் ஏதென்ஸ் நகரத்தில் ஏராளமானோர், லண்டன் மாநகரத்தில் பலர், இத்தாலி, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெருந்திரளானோர் பலியாகினர் பலதரப்பட்ட தொற்றுப் பரவல்களில். அதுபோலத்தான் இன்றும் பரவி பயமுறுத்திக் கொண்டிருக்கிறேன் நான். இதில் என்னை மட்டும் எப்படி குற்றம்சாட்ட முடியும் உங்களால்?
நாடு முடக்கத்தால் தொழிலை இழந்தவர்களுக்கு வாழ வழியில்லை; கையில் கரன்சி இன்றி உயிரைக் காக்க பரிதவிக்கும் ஏழைகளுக்கு பாதுகாப்பில்லை.
இத்தகைய அப்பாவிகள் நினைத்திருந்தால் சாமி சிலைகளைக் கடத்தி விற்றுக் காசு பார்த்திருக்கலாம்; மலை, காடு, ஆறு, குளங்கள் போன்றவற்றின் வளங்களைச் சூறையாடி வசதியாக வாழ்ந்திருக்கலாம் எப்போதோ.
இதைத்தானா இந்த ஆளும் வர்க்கம் விரும்புகிறது?
திடீரென்று போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டது; அவர்கள் அதிர்ந்து போயினர். கையிருப்பு அனைத்தும் கரைந்தே போனது; அவர்கள் கேட்பாரின்றி கலங்கிப் போயினர். என்னைக்காட்டிலும் பசி என்கிற பெரும் பிணி அவர்களைத் துரத்தித் துன்புறுத்தியது. அதற்குப் பயந்து சொந்த ஊர் சென்று சேர நெடுஞ்சாலைகளிலும், தலை தெறிக்க தண்டவாளங்களிலும் ஆபத்தான பயணத்தை அணியணியாய் மேற்கொண்டனர் தொடர்ச்சியாக. அவர்களின் அச்சத்தைப் போக்கி இருக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்கி உயிர் வாழ்வதை உறுதிப் படுத்தி இருக்க வேண்டும் இன்று என்னை அடக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்துவோர். அதை முயன்றார்களா இன்று முகக் கவசத்தைக் கூட முழுமையாகத் தரமாகத் தரமுடியாத இந்தத் தாராளமய ஆதரவாளர்கள்?
நீதிபதி: எதையோ பேசி உலக மக்களைக் கொன்று குவிக்கிற கொடுங்குற்றச்சாட்டிலிருந்து
தற்காத்துக் கொள்ள நினைக்கிறார் கோவிட் 19 என்கிற இந்தக் கொரோனா குற்றவாளி.
கொரோனா: இல்லை; என்னை தற்காத்துக் கொள்ளும் எண்ணமில்லை. இவை அனைத்தும் என் பெயரால் அரங்கேறும் அவலங்கள் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். இதில் என்ன பிழை இருக்கிறது?
நான் அப்பாவிகளைக் கொன்றது ஒரு குற்றம், நாடுகள் தொழில் வளர்ச்சியை இழந்தது ஒரு குற்றம், குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தகச் செழிப்பைச் சிதைத்தது ஒரு குற்றம். இத்தனை பிசகுகளுக்கும் பொறுப்பாளி யார்? யார்? யார் பொறுப்பாளி?
நான் பரவத் தொடங்கிய பொழுதே சமூக இடைவெளியைக் கிஞ்சித்தும் சட்டை செய்யாதது யார் செய்த தவறு?
எந்தத் தடையும் இல்லையே என சுற்றித்திரிந்த என் தவறா,
அல்லது வர்த்தகம் சரிந்துவிடும், வியாபாரம் முற்றிலும் படுத்துவிடும் என கருதி என்னை உலவ விட்ட அதிகார வர்க்கத்தின் தவறா ?
அரசிடமிருந்த துறைகள் அனைத்தையும் தனியாருக்குத் திறந்துவிட்டது யார் செய்த தவறு?
என்போன்ற வைரசின் தவறா?
அல்லது இதன் வழியே ஒதுக்கீடுகளை ஒழிக்க முடியும் என்கிற கனவோடு சட்டத்தின் சரத்துக்களைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கனவான்களின் தவறா?
அந்நிய முதலீட்டைத் தனியார்மயம் என்கிற பெயரில் அளவின்றி அவிழ்த்து விட்டது யார் செய்த தவறு?
உள்ளூர் தொழில்களைச் செய்ய இயலாத உழவர்கள் மற்றும் விவசாயிகளின் தவறா?
அல்லது அவர்களின் கடனை அடித்துப் பிடுங்கிவிட்டு, கார்ப்பரேட்டுகளின் கடனுக்குத் தூபம் போடுகிற துரோகிகளின் தவறா?
இது போன்ற தவறுகள் துடைத்து எறியப்படும் வரை என்போன்ற தொற்று உயிர்க் கொல்லிகளை மட்டும் குறை கூறி பயனேதுமில்லை. இதுதான் எத்தனை ஆய்வுகளை ஏசி அறையில் அமர்ந்து அயராது நடத்தினாலும் அரும்பப் போகிற அழுத்தமான பாலபாடம்; மறுக்கமுடியா உண்மை; கைவிட இயலாக் கோட்பாடு; சம நீதிக்கான வாழ்வியல் தத்துவம்; அனைத்துமே.
(கட்டுரையாளர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்).
நகைச்சுவையாக இருந்தாலும். நறுக்கென்று கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
பதிலளிநீக்குநன்றி உங்களுக்கு.
நீக்குஎனது இந்த படைப்பு வெளிவர உறுதுணையாக இருந்த ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றியை சமர்ப்பித்து கொள்கிறேன்!
பதிலளிநீக்குபுதுமையான முயற்சி. ஜூன் மூன்றன்று இதைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது எத்தனை பொருத்தம். வாழ்த்துகள் உங்களுக்கு
பதிலளிநீக்குஅருமையான முயற்சி!
பதிலளிநீக்குஎழுதுகோலின் ஆல் செங்கோலையும் தொட முடியும் என்ற
பராசக்தியின் முயற்சி அருமை.
தொடுக்கப்பட்ட வினாக்கள் வீரியம் கொண்டதாக உள்ளத்தை தட்டி எழுப்ப செய்கின்றது.
ஆட்சியாளர்களின் அலட்சியத்தை அலற விட இந்த அலசல் போதுமானது.
அருமை அண்ணா அருமை.உங்களின் ஒவ்வொரு கேள்விக் கணைகளும் ஒவ்வொரு ஏவுகணை உங்களின் ஏவுகணைகளின் குழிகள் அனைத்தும் சரியான இலக்கை சென்றடைய வேண்டும் நீங்கள் கற்பனையில் எழுதிய இந்த வசனம் நிஜத்தில் எழுதிய அவருடைய பிறந்த நாளிலே படிக்கிறோம் என்று என்பதுஇன்னும் கூடுதல் சிறப்பு இன்னும் நீங்கள் எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் உங்கள் எழுத்தை ரசித்து படிக்க நாங்கள் இருக்கிறோம் எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகற்பனை + உண்மை = கட்டுரை அருமை.
பதிலளிநீக்குகுற்றவாலி கொறோனா பேசும் உண்மை ஆழும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் அன்றாடம் நிகழ்த்தும் அரசியல் நாடக அறங்கேற்றமும்,, முதளாலித்துவத்தின் மூர்க்கத்தனமும் வெளிப்படுகிறது. மாற்றுத்திறணாலிகள் மாநிலத்தில் அடைந்துகொண்டிருக்கும் இன்னள்களையும், பத்தாம் வகுப்பு பார்வை மாற்றுத்திறனாலி மானவர்கள் அடைந்துகொண்டிருக்கும் மன உளச்சல்களை, கூன்டில் நின்ற காண்டில் படம்பிடித்துக் காட்டுகின்றன. உறிமைச்சட்டங்களும், அடையாள அட்டைகளும் அடையாளமின்றிப்போன அவளநிலையை, கவலையோடு பறாசக்த்தி வசனத்தை படியெடுத்து பதிவு செய்த முயற்சி பாறாட்டிற்குரியது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவிலங்குகளை அதிகம் வேட்டையாடவில்லை நான்; மனிதர்களையே மரணத்தின் முன் மண்டியிடச் செய்தேன். '
பதிலளிநீக்குஇந்தச் சில வரிகள் தான் மாபெரும் சிந்தனைக்கு அடித்தளம் ஆகிறது. விலங்குகள் இன்னும் இயற்கையோடு தான் இணைந்து இருக்கின்றன. மனிதனைத் தவிர அத்தனை உயிர்களும் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன. மனிதன் மட்டும் தான் இயற்கையை எதிர்த்து வாழ்கிறான். இயற்கையை அழித்து வருகிறான்.
உண்ணக்கூடாத அவற்றையெல்லாம் உன்ன தொடங்கி நோய்களின் எண்ணிக்கையை கூட்டினான்.
அழிக்கக் கூடாதவற்றை எல்லாம் அழித்து உணவுச் சங்கிலியின் தொடர்பைத் துண்டித்தான். அதன் விளைவைதான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையின் அற்புதமான படைப்பும் மனிதன் தான்.
இயற்கையின் மிக அற்பமான படைப்பும் மனிதன் தான்.
தங்களின் கேள்விகளால் இந்த மனித சமூகம் தவறு உணர்ந்து திருந்தட்டும்.
நன்றி அண்ணா தங்கள் பதிவிற்கு.
ஆசிரியர்ஆதன்ஆஅகன்ற பார்வையால்,
பதிலளிநீக்குசமூகத்தை ஊடுருவி
ஆழ்ந்து சிந்தித்து,
ஆதிக்க சக்திகளின் நியாயமற்ற செயல்களையும்,
அரசியல்வாதிகளின் முன் யோசனை அற்ற போக்குகளையும்
சுட்டிக்காட்டி,
என்ன செய்திருக்க வேண்டும்
என்ற தீர்வையும் கொடுத்திருக்கின்றார்.
மாற்றுத் திறனாளிகள் அடைந்து வரும் இன்னல்களை
எடுத்துரைத்தும்,
அதற்கு காரணமானவர்களை இடித்துரைத்தும் ,
துணிச்சலோடு பேசி இருக்கின்றார் அபாரமான கற்பனை
நல்ல முற்போக்கு கருத்துக்கள்
பாராட்டுக்கள்
மேலும் மேலும் உயர்வதற்கு என் வாழ்த்துக்கள்.
உங்களின் ஒவ்வொரு வாழ்த்து மொழியும் என்னை அதிகமாகப் ஊக்கப்படுத்தி தொடர்ந்து எழுத முயல வேண்டும் என்கிற உத்வேகத்தை அளித்தது. அத்தகு எண்ணத்தை எனக்குள் விதைத்த உங்களின் பாராட்டிற்கும் எனக்கு எழுத வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவிற்கும் நன்றியை காணிக்கையாக்கி கொள்கிறேன்!
பதிலளிநீக்குநவீன பராசக்தி மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார் உங்கள் மூலமாக என்பது என் கருத்து மிக அருமை ஐயா
பதிலளிநீக்குகூறிய அரசியல் விமர்சனம், நுணுகிய சொல்லாட்சி, ஆழமான சமூக நீதிக் கருத்துக்கள்! உறைவீச்சின் நடை அருமையிலும் அருமை மகேந்திரன்!
பதிலளிநீக்குஇக்காலம் என எக்காலத்திற்கும் சமூகநீதிக்கான போராட்டத்திற்குத் தேவையான சொல்லாயுதத்தை 65 ஆண்டுகளுக்கு முன்பே வடித்துக்கொடுத்த அந்தப் பெருங்கிழவனின் ஆற்றலும் வியப்பூட்டுகிறது!
முருகானந்தன்.