பயிற்சியாளர்
பத்துமுறை
ஓடச் சொல்கிறார்
மைதானத்தைச் சுற்றி.
ஐந்துக்கடுத்து
ஏழு;
ஏழுக்கடுத்து
ஒன்பது
என ஓடும்
எல்லோருக்கும் மாறி
விடுகிறது
என் வரிசை.
*********************
பந்துவீச்சைத்
துவைத்துவிடலாம்;
கல வியூகத்தைத்
தகர்த்துவிடலாம்;
முதன்மை
துடுப்பாட்ட வீரர்களை
எளிதில்
வீழ்த்தி விடலாம்;
இன்னும் பல
யுக்திகளை வகுத்து
எதிரணியை
முடக்கி விடலாம்.
ஒரு அணித்
தலைவருக்கு எப்போதும்
பெரும்
தலைவலியாய் இருப்பது,
தன் அணியில்
யாரைப் பதிலி
ஆட்டக்காரராக
இருக்க வைப்பது
என்பதுதான்.
*********************
30 நாட்கள் தொடர்ந்து
உடற்பயிற்சி
செய்தால்,
ஓரளவு
உள்ளடங்கும் வயிறு;
இரண்டு நாட்கள்
பயிற்சி செய்வதை விட்டுவிட்டால்
குபீரென முன்
தள்ளி நிற்கிறது!
தொப்பையும்_தோரணையும்
*********************
உங்களுக்குத்
தெரியுமா?
மெக்ராத்தின் துல்லியமான
பந்துவீச்சாலோ,
சச்சினின்
கவனக்குறைவான துடுப்பாட்டத்தாலோ,
அவர்
ஆட்டமிழக்கவில்லை!
எங்கள்
வகுப்புத் தோழன் காமராஜ்,
எழுந்து
நின்றதால்தான் சச்சின்
ஆட்டமிழந்தாராம்.
இப்போதும்
சொல்கிறார் எங்கள் விடுதி காப்பாளர்.
*********************
கவிதை அருமை.
பதிலளிநீக்குவிளையாட்டு உடல்நலத்திற்கு மிக சிறந்தது என்ற கருத்தை கவிதையில் குறிப்பிட்டுள்ளது அருமை
உன்மைதான் தம்பி.
பதிலளிநீக்குதொப்பையும் தோரனையும். ஒருனால் விட்டாலும் முன்னாடி வந்து குபீர்னு குதிக்கிது.