படிக்கத் தெரிந்தும் படிக்கமுடியாத
எண்ணிலடங்கா அதிகாரங்களைக் கொண்ட
அழகிய புத்தகம் இவள் இதழ்கள்...
பார்வையற்றவர்களின் கைகளில் தவழ்ந்திடும் காவியமாய் இவள்.
சரித்திரச் சாதனைகளையும்
தன்மீது சுமந்திடும்
சுமைதாங்கியாய்
கடந்து வருகிறாள்...
தலையங்கத்தைத் தன் தலையாய்க் கொண்டு!
கருத்துகளைத் தன் விழிகளாய்க் கொண்டு!
வீரநடை போடுகிறாள்!
தொழில்நுட்பங்களைத் தன் தோள்களில் சுமந்து!
சினிமாக்களைச் சிந்தையில் ஏந்தி!
சிறகடிக்கச் செய்கின்றாள்!
நினைவுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி!
காதலில் கரைத்து விடுகின்றாள்!
என்ன ஓட்டங்களை ஏடுகளில் சுமக்கிறாள்
சில நேரங்களில் எள்ளி நகையாடுகிறாள்!
உள்ளத்தை ஓவியமாய் வரைகின்றாள்!
எண்ணங்களை எழுத்தாய்த் தருகின்றாள்!
பாடலைப் பாமாலை சூடிக்கொண்டு
பார்வையற்றவர்களோடு பவனி வருகின்றாள்!
அரசியலையும் ஆராய்கின்றாள்!
பல ஆளுமைகளையும் உருவாக்கித் தருகின்றாள்!
அவ்வப்போது சிறப்பு இதழ்களாய் மிளிர்கின்றாள்!
சிந்தனைகளைத் தட்டி எழும்பச் செய்கின்றாள்!
இவள் கனவில் வந்தால் காதல் என்பேன்!
ஆனால் தாங்கி நிற்கின்றாள்;
அதனால் தாய் என்கிறேன்!
‘முத்தமிடு’ என்று கேட்டேன்
ஆனால் அவள் முன்னேற்றத்தை தருகின்றாள்!
‘கவிதையா’ என்று கேட்டேன்!
‘இல்லை கற்றுக்கொள்’ என்கிறாள்!
‘அணைத்துக்கொள்’ என்றால்
நான் ஆசான் என்கிறாள்!
‘நீ வெற்றி மங்கை!’ என்று நான் போற்றினேன்
‘இல்லை, நான் விரல்மொழியர் மின்னிதழ்’ என்கிறாள்!
இணையத்தில் இணைந்தது போதும் நீ
ஏடுகளில் எழுத்தாய் வா!
காத்திருக்கிறேன் உன்னைக் கரம் பிடிக்க...
(கவிஞர் காரைக்காலில் வசித்துவருகிறார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை தமிழ் (B.Lit) முடித்தவர்)
தொடர்புக்கு: umosesrajbabl2001@gmail.com
கவிதை மிக மிக அருமை
பதிலளிநீக்குசுவைபட இருந்தது இந்தக்கவிதை வழங்கிய தங்களுக்கு எனது மிக்க நன்றிகள்
பதிலளிநீக்குமின்னிதழில் உங்கள் கவிவரிகள் மின்னியது. அது
பதிலளிநீக்குஎன் பார்வையில்லாத கண்களிலும் மின்னியது. வாழ்த்துக்கள். நன்றி!
மின்னிதழில் உங்கள் கவிவரிகள் மின்னியது. அது
பதிலளிநீக்குஎன் பார்வையில்லாத கண்களிலும் மின்னியது. வாழ்த்துக்கள். நன்றி!
மின்னிதழில் உங்கள் கவிவரிகள் மின்னியது. அது
பதிலளிநீக்குஎன் பார்வையில்லாத கண்களிலும் மின்னியது. வாழ்த்துக்கள். நன்றி!
காதலாகி நன்கு கசிந்து உருகியுல்லீர்கள்.
பதிலளிநீக்கு