அறிவிப்புகள்

                1. தொட்டுத் தொடரும் பாரம்பரியம்

20-9-2020 அன்று, பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை "பார்வையற்றோர் வாழ்விலும் வளர்ச்சியிலும் பிரெயில்: வரலாறும் வருங்காலமும்" எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கினை நடத்தியது. இக்கருத்தரங்கில், நமது விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியர்  ரா. பாலகணேசன் பிரெயிலின் வரலாறு மற்றும்  தற்கால நிலை குறித்து உரையாற்றினார்.

அவரது உரையைக் கேட்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

 

2. போராட்ட நாயகனுக்குப் புகழஞ்சலி

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் v.முத்துசாமி விபத்தின் காரணமாக 1-10-2020 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார். 4-10-2020 அன்று பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் இணையவழியில் முத்துசாமி அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் அவருடன் சமூகப்பணி செய்தவர்களும், பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கான பல அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் விரல்மொழியர் சார்பாக விரல்மொழியரின் தொகுப்பாசிரியர் ம. தமிழ்மணி கலந்துகொண்டு, அன்னாரது சமூகப் பங்களிப்பினை எடுத்துரைத்தார். நிகழ்வை முழுமையாகக் காண

இந்த  இணைப்பைச் சொடுக்குங்கள்.

 

3. அமெரிக்க மின்நூலகத்தில் விரல்மொழியர்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கிவரும் அமெரிக்காவைச் சேர்ந்த மின்நூலகம் புக்‌ஷேர். இந்நூலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உறுப்பினராக இயலும். தற்போது இந்த உலகலாவிய  நூலகத்தில் விரல்மொழியரின் முதல் இரு இதழ்கள் படிக்கக் கிடைக்கின்றன. புக்ஷேரில் விரல்மொழியர் மின்னிதழ் இடம் பெற உதவிய கர்ணவித்யாலயா அமைப்பிற்கு விரல்மொழியர் வாசகர்கள் மற்றும் ஆசிரியர் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் இரு இதழ்களையும் படிக்க

இந்த  இணைப்பைச் சொடுக்குங்கள்.

 

4. வாசகர்களின் கவனத்திற்கு

"உள்ளடக்கமற்ற உள்ளடங்கிய கல்வி: சிறப்புக் கல்வியைப் புறக்கணிக்கும் புதிய கல்விக் கொள்கை _2020" என்ற தலைப்பிட்டு கடந்த இதழில் வெளியான  முனைவர் கு. முருகானந்தன் அவர்களின் கட்டுரையின் அடுத்த பகுதி தவிர்க்கமுடியாத காரணத்தால் இவ்விதழில் இடம்பெறவில்லை என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

5. மணமேடை

மணமேடை பகுதியில் தங்களின் துணையைக் கண்டறிய விரும்பும் நபர்கள்  இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள

மணமேடை

பகுதியில் சென்று, அதில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குச் சரியான விரங்களைப் பூர்த்திசெய்து

viralmozhiyar@gmail.com

என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் அனுப்ப இயலாதோர் 9894335053 என்கிற அலைபேசி எண்ணில் விரல்மொழியர் ஆசிரியர் ரா. பாலகணேசன் அவர்களை அழைத்துத் தங்களின் விவரங்களைத் தெரிவிக்கலாம்.

 

 

தொகுப்பு: பொன்.சக்திவேல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக