கவிதைகள் - குழல்வேந்தன்

 

graphic ஆடம்பர வீட்டின் படம்
 

 

1. வீடு தேடல்

நாளும் நாளும் மனம் நாடும்

வீடு தேடுதலை!

வீடு தேடுதல் என்பது

வீண் கால விறையமன்று.

எது எனக்கான வீடு?

பாம்பு வதியும் புற்றா?

பழுதற்ற பட்டுப் பூச்சியின் கூடா?

மதுரம் மிக்கதோர் தேனடையா?

வழுவிலா வான்குருவியின் கூடா

தேடித் தேடித் தேடித் திரியும் 

இந்த எளிய ஜீவனின் அந்தராத்மா!

பாம்பு உரையும் புற்றிலும்,

பட்டுப் பூச்சியின் கூட்டிலும்,

தேன் பிளிற்றும் அடையிலும்,

வான்குருவியின் கூட்டிலும்,

கூ விட்டு கூடு பாய்ந்து

வாழ நினைத்தால் வழி உண்டு

மாநிடநே!

நீ கட்டிய வானளாவிய மாளிகைகளில்

வண்ண அலங்கார பூச்சுகளில்

உந்தன் ஆடம்பர நாகரிக  விஞ்ஞானக் கருவிகளில்

செயற்கை சார்பியலே சாசுவதமாதலால்

போ போ உன் வீடு

போலித் தனத்தின் பெரும் கேடு.

 

2. எப்படி வருவாய்?

தந்தித் தகவல்போல் தவழ்ந்து வருவாயோ!?

அஞ்சல் அட்டைபோல் அலைந்து வருவாயோ!

குறுந்தகவல்போல் குழைந்து வருவாயோ!

கைய்யடக்க உரைத் தாள்போல் கறந்து வருவாயோ!

கட்செவிக் காட்சிபோல் கலகலத்து வருவாயோ!

மின்மடல்போல் மீள மீள மிளிர்ந்து வருவாயோ!

தேக   மணம் நுகர்ந்திடத் தேடித் தேடி  தேடி அலைவாயோ!

குருதிச்சாறுதனைப் பருக குதுகுலமாய் வருவாயோ!

உறவுதமைச் சொல்லி உவப்புடனே வருவாயோ!

எந்த நிறம் காட்டி வருவாய்?

எந்த மொழி கூட்டி வருவாய்?

தெரியாத செய்தியாக வருவாயோ!

தெரிவிப்பதற்கான  செய்தியாக்க வருவாயோ!

வந்திடும் வேளைதான் எதுவோ!

முற்றுப் புள்ளிக்கு முன் வந்த

முடிவறியா வினாக்குறியாய்

தொடரும் வியப்புக் குறி!

 

தொடர்புக்கு: 9080351721

3 கருத்துகள்:

  1. ஆடம்பர நாகரிக  விஞ்ஞானக் கருவிகளில் எழுதப்பட்டு எங்களுக்கு படைக்கப்பட்ட கவிதைக்கும் கவிஞருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள் மிக அருமை ஐயா வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு