அறிவிப்புகள்

விரல்மொழியர் துணையுடன் வெளியான புத்தகங்கள்

பார்வை மாற்றுத்திறனாளிகள் அமேசான் கிண்டிலில் புத்தகங்களை வெளியிட தொழில்நுட்ப உதவி வழங்குவதாக அறிவித்திருந்தது விரல்மொழியர். அதன்படி,

அந்தகக் கவிப் பேரவையின் ‘குழந்தைகளைச் சிந்திப்போம்’ என்ற நூலும், சிதம்பரம் இரவிச்சந்திரன் அவர்கள் எழுதிய ‘காந்திஜி ஒரு திறந்த புத்தகம்’ என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூல்களைப் படித்துப் படைப்பாளிகளை ஆதரிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

புத்தகங்களைப் படிக்க:

காந்திஜி – ஒரு திறந்த புத்தகம்: காந்தியடிகள் பற்றிய வினா விடை தொகுப்பு

குழந்தைகளைச் சிந்திப்போம்

 

   இதழில் இடம்பெறாத டாப் 10 பாடல்கள்

   நமது இதழில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கணேஷ் & யாசர் தொகுத்து வழங்கும் டாப் 10 பா்டல்கள் வரி வடிவிலும், ஒலி வடிவிலும் இடம்பெறும். தனக்கெனத் தனி ரசிகர்களைக் கொண்ட இந்தப் பகுதி இந்த இதழில் இடம்பெறவில்லை.

   2020-இல் போதிய அளவில் திரைப்படங்கள் வெளிவராததால் இந்நிகழ்ச்சியை வடிவமைக்க இயலவில்லை என்கிறார்கள் கணேஷ் & யாசர். 2021-ஆம் ஆண்டிற்கான டாப் 10 பாடல்கள் தொகுப்பை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வாசகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

 

விரல்மொழியர் மணமேடை

விரல்மொழியர் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் துணையைத் தேடிக்கொள்ளப் பாலமாகச் செயல்பட்டுவருகிறது. மணமகன்/மணமகள் தேவையான பார்வை மாற்றுத்திறனாளிகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளை மணக்க விரும்பும் பிற மாற்றுத்திறனாளிகளும், மற்றவர்களும் இப்பகுதிக்குத் தங்கள் விவரங்களைத் தரலாம். விரல்மொழியரின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை பகுதியில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கி இதில் நீங்களும் பங்கேற்கலாம். இல்லையேல், 9894335053 என்ற இதழாசிரியரின் தொலைபேசி எணிற்குத் தொடர்புகொள்ளலாம். மேலும்,

viralmozhiyar@gmail.com

என்ற எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொள்ளலாம்.

 

உதயமாகும் எண்ணங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறோம்

         அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டியை அறிவித்திருக்கிறது. குறுங்கட்டுரை பிரிவுக்கு 50 ஆயிரமும் நெடுங் கட்டுரை பிரிவிற்கு 5 லட்சமும் முதல் பரிசு. இப்போட்டி 10-12-2020 தொடங்கி 10-03-2021 வரை நடைபெறும். 

        எழுத ஆர்வம் இருப்பவர்கள் கதை கவிதை கட்டுரை நாடகம் நாவல் இப்படி எது வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அதனை அமேசான் கிண்டிலில்  மின் புத்தகமாக வெளியிட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு அமேசானின் பென் டு பப்ளிஷ் பக்கத்தை பாருங்கள். 

        இப்போட்டியில் கலந்துகொள்ளும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறது விரல்மொழியர் மின்னிதழ். பென் டு பப்ளிஷ் போட்டியில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். 

        ஏனெனில், இச்சமயத்தில்தான் அதிகமான வாசகர்கள் கிண்டிலில் புத்தகங்களை படிப்பார்கள். இச்சமயத்தில் புத்தகம் வெளியிட்டால் அதை பொது சமூகத்தினரும் கவனிப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனவே தயக்கத்தை உடைத்து எழுதத் தொடங்குங்கள். உங்களுக்கு உதவ விரல்மொழியர் தயாராகவே இருக்கிறது. 

        கிண்டில் மின்புத்தகம் தொடர்பான தொழில்நுட்ப உதவிக்கு 9159669269 என்ற  என்னைத் தொடர்புகொள்ளுங்கள். தொழில்நுட்ப உதவி வழங்குதல் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

 

தொகுப்பு: ரா. பாலகணேசன்

1 கருத்து:

  1. மாற்று திறனாளி எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் உதவுவதாக கூறி இருப்பது பல இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி இருக்கும். நல்ல முன்னெடுப்பு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு