கவிதை: என்னைப் பார்! கண்ணைத் திறந்து, உண்மையில் பார்! ஆங்கிலத்தில் - தியானா நோரேக, தமிழில் - முனைவர் உ. மகேந்திரன்

 ஏனைய குழந்தைகள் முற்றத்தில் பந்து விளையாட்டை ஆடிக்கொண்டிருக்க தனியாக படிக்கட்டில் அமர்ந்திருக்கும் குழந்தை நான்.

 

காரணம் என்னால் விளையாடும் அளவுக்கு பார்க்க முடியாது, புத்தகங்களை நேசிக்க கற்றுக்கொண்டேன்.

 

வெள்ளி இரவுகளில் தலை முழுகும் பருவப்பெண் நான் ,ஏனெனில் எனது பாரமான பிரெயில் புத்தகங்களைச் சுமக்கும் பள்ளிக்கூடத்து பையன்கள் ஒருபோதும் யோசித்தது இல்லை நான் நடனம் புரியவும் படம் பார்க்கச் செல்லவும் விரும்பினேன் என்று.

 

இதயம் முழுமையும் ஆச்சரியமும் ஆனந்தமும் நிரம்பி இருக்க புதிதாய் பிறந்த சிசுவை வைத்திருக்கும் இளம் மங்கை நான், அப்பொழுது என் இருப்பை இருட்டடிப்பு செய்து செவிலியர்கள் அங்கலாய்த்து கொண்டார்கள் நான் எப்படித்தான் அந்த குழந்தையைக் கவனித்துக் கொள்ள போகிறேன் என்று!

 

பள்ளி உணவகத்தில் தனிமையில் இருக்கும் இளம் தாய் நான் ,ஏனெனில் அன்னையர் விருந்தில் கலந்துகொள்ளவோ, என் குழந்தைக்கு உணவு பரிமாறும் வேலை ஒதுக்கவோ ஆசிரியர் என்னை எதிர்பார்க்கவில்லை.

 

உங்களிடம் இவற்றைச் சொல்கிறேன் காரணம் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் ஊனம்தான் நான் அல்ல, உங்களைபோல் தான் நானும்!

நான் சிரிப்பேன் ,நான் அழுவேன், நான் பாடுவேன் நடனமாடுவேன்.

 

என் உறவுகளையும் நண்பர்களையும் நான் நேசிக்கிறேன். நான் என் சமூகத்திலும் உலகிலும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன்.

 

உங்களின் இறக்கம் எனக்குத் தேவையில்லை !என்னை உங்களில் ஒருவராக ஏற்கும்படிதான் கேட்கிறேன்.

 

வேறொன்றும் வேண்டாம். கண்களைத் திறந்து பார்க்கவே உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் ,முடங்கியதாக அல்ல உங்களைப் போல் ஒருவராக ,சக மனிஷியாக!

 

graphic பேரா. U. மகேந்திரன் அவர்களின் படம்
மொழிபெயர்ப்பாளர் முனைவர் உ. மகேந்திரன்

மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள:   mahendranbefrank@gmail.com

2 கருத்துகள்:

  1. எளிமையான கவிதை. எளிமையான வேண்டுகோள்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக எளிய நடையில் அமைந்த வேண்டுகோள்கள் எல்லாம் அக பார்வை பெண்களின் விருப்பத்தை பறைசாற்றியது.

    பதிலளிநீக்கு