தனித்து இரு! என் மின்னணு உயிரே.
வாழ்வின் மீது விருப்பம் அற்று அந்த எழுத்துகளை நீ பேசுகிறாய்.
நீ கெட்டிப் படுத்தப்பட்டுவிட்டாய்
உனது சிற்றறைக்குள்,
மூச்சடைத்தபடி.
மொழிக்காக முழு திரையையும் நீ தேடுகிறாய்.
சொல் திறனோடு இருக்க நீ முயல்கிறாய்.
நரம்புகளை எண்ணும் அறிவுத்திறன் உனக்கு இருக்கிறது.
ஒருமுறை மட்டும் வா ,உண்மைப் பயனத்தைப் பார்,
உலகின் பொது அமைப்பைப் புரிந்துகொள்.
அந்தக் கரங்களோடு பேசு, அவைதாம் எனது மழலைப் பருவத்தில் அவற்றின் விரல்களை எண்ணச் சொல்லின.
அவற்றைக் கவனித்து பார் ,அவைகளுக்கு உறிஞ்சு குழல்களையும் தேக்கரண்டியையும் வழங்கு.
நீ வருங்காலத்தில் சிரிக்கச் சேமித்து வைத்துக்கொள்ளும் பொருட்டு,
உனது வேகம் கொண்டு அவற்றின் தயக்கத்தைக் கேலிசெய்.
உனது அருவருப்பான இரைச்சல் கொண்டு அவற்றின் அற்புதத்தை மீட்டெடு.
பக்கங்களைத் திருப்பி, அவற்றின் எழுத்துக்களை கிழ் இருந்து படி.
சில வினாடிகள் நில் ,திரையின் மறுபக்கத்தை உற்று கவனி.
உனது நேரத்தைப் பெரிதாக்கு, நான் காத்திருப்பேன் மின்சாரம் இல்லா இரவுகளின் சிசுவாக.
சில வேளைகளில் நான் சொல்வதைக் கேள் ,அதிலும் நான் எப்படி உனது நிலையற்ற உணர்வுகளால் வெறுப்படைகிறேன் என்பதைப் பதிவுசெய்.
நாம் சென்று வந்தோமே அந்த இடங்களை சேகரி, நாம் திருத்தினோமே அந்த வார்த்தைகளைச் சேமி.
என் விரல்களோடும் என் பொறுமையின்மையோடும் அவற்றின் சோதனையோடும் நீ கலந்துரையாடுகிறாய் அதிவேகமாக.
உனது வருகை எனது நோய்,
உனது புலப்படாமை எனது உலக சமரசம்.
நாம் அறிவோம் இதை,
உன் மனசாட்சி எனது கையொப்பம்.
நீ சற்று கையறு நிலையில் இருப்பினும் ,நமக்குள் நாம் தர்ச்சார்பு உடையவர்கள்தான்.
மொழிபெயர்ப்பாளர் முனைவர் உ. மகேந்திரன் |
மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: mahendranbefrank@gmail.com
திரைவாசிப்பான் வருகை நோயா? நோய்க்கான மருந்தா? பெரும்பாலும் கவிஞர்கள் அப்படித்தான் போல. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிரை வாசிப்பான் நோய் தீர்க்கும் மருந்து கண்டிப்பாக நோய் அல்ல
பதிலளிநீக்குகவிஞர்களை விடுங்கள், திரை வாசிப்பாங்கலின் வருகை இல்லாமல் பார்வையற்றோர் கவிதைகளே இணையவேலியில் பயணித்திருக்க முடியாது! இந்தக் கவிஞரும் கூட திரை வாசிப்பானுடன் ஒரு காதலும்,, நட்பும், ஊடலும் கலந்த உரையாடலை நடத்துகிறார் என்றே தோன்றுகிறது. ஒருவேளை ஜாஸ் பயன்படுத்தி பயன்படுத்தி ஊடல் கொஞ்சம் அதிகரித்துவிட்டு இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை/! இதோ கவிதையின் ஆங்கில மூலம்:
பதிலளிநீக்குScreen Reader by Jyothsnaphanija Bolla
Stay alone! My electronic soul.
You speak those texts with no interest on life.
You are crystallized
in your cabin,
suffocated.
You search the whole screen for language.
You try to be eloquent.
You have the proficiency of counting the nerves.
Come out for once, see the actual trip,
Capture the physiognomy of the world.
Speak to those hands, they asked me to count their fingers in my infancy.
Look at them, serve them straws and spoons.
Mark their reluctance of your speed
for your own future source of laughter.
Restore their wonder at your cacophony.
Roll the page, read it’s letters from the downwards.
Stop for sometime, stare at the other side of the screen.
Magnify your time, I will wait like an infant in the power cut nights.
Listen me sometimes, record how I’m annoyed of your emotional instability.
Store those places we have visited, save those words we have edited.
You are hyper interactive to my fingers, my impatience, and their experimentations.
Your entry is my illness,
Your invisibility is my toleration of the world.
We know it,
Your conscious is my sign.
We are independent in each other, though you are little helpless.
எந்த நோக்கத்தோடு திரை வாசிப்பானை நோய் என குறிப்பிடப் பட்டுள்ளது என்று எனக்கு புரியவில்லை. இதன் ஆங்கில வடிவத்தையும் கீழே கொடுத்தீர்கள் அது ஒரு நல்ல முன்னெடுப்பு. மொழியாக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு