ரோஜாவின் பெயரை நான் பார்க்க விரும்புகிறேன்
எப்படி மணல் எழுத்தின் மீது சூரியன் விழுகிறது
எப்படி சிசு கொடியினை வெறிக்கிறது
ஒற்றைப்படை எண்களை வெறுக்கும் முதியோர்.
நானும் ஒரு ஒற்றை இலக்கம்
ஒரு சிறு கிரகத்தினுள் பொருந்த முடியாது.
நான் மாறுபட்ட ஒன்றினை மழைத் துளிகளை வைத்து செய்ய வேண்டி இருக்கிறது
ஒருவேளை நான் அவற்றைக் கொண்டு மாவுப் பண்டம் செய்வேன்.
புன்னகையில் இருக்கும் வண்ணத்தை நான் பார்ப்பதில்லை, மாறாக விளக்கங்களைப் படித்துக்கொள்வேன்.
குரல்கள், நறுமணங்கள், காதல் மற்றும் தேன் தோய்ந்த சொற்கள் வண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. அவை வெறும் துன்பம் தவிர்க்கிற தன்மையைக் கொண்டிருக்கின்றன.
அலங்கோலமான உருவகங்களுக்கு அப்பாற்பட்டு நான் வாழ்கிறேன்
தொடுதலுக்கும் அப்பால்.
நான் ஒரு சிதைப்புற்ற பட்டம்
ஒரு ஒலி பொருந்தாத ஈரடிச்சிர்.
கற்பனை எங்கும் கொண்டுசெல்வதில்லை, ஆசைகள் அப்படி அல்ல.
எனது கனவுகள் மற்றவர்களின் கனவுகளைக் கொண்டிருக்கின்றன.
பேசுகிறேன் கனவுகளில்.
நான் ஒரு பாடகன் அல்ல, இசை வித்வானும் அல்ல, ஓவியனும் அல்ல தீப்பறவையும் அல்ல.
நீங்கள் தான் நான்.
என் பொழுதைப் போக்கவே எனது வாழ்க்கையைப் பலமுறை எழுதுகிறேன்.
மற்றவர் காப்பியை உருஞ்சும் பொருட்டு.
யாரோ ஒருவர் என் வாழ்க்கைக்குத் தவறுகளைக் கற்பிக்கையில் நான் என்னைச் சாகடித்துக் கொள்கிறேன்.
பிறகு நான் விழித்துக் கொள்கிறேன், அனைவரும் அனைத்தும் உலகின் ஒரு அங்கம் என்று எனைத் தேற்றியபடி.
இதன் சுழற்சி, இதன் தீவிரம் மற்றும் இதன் குணப்படுத்தும் தன்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
தனித்த பிரெயிலின் தழும்புகள்
மென்மையாக்கப் பட்டவை
பட்டத்தைப் பார்க்கவேண்டும் எனக்கு.
ஒரே வடிவத்துடன் ஒவ்வொன்றும் மாறுபட்டது.
பறக்கின்றன விழ்வதற்கே
மருந்துகளின் மேல்.
பட்டம் புதிய அகராதி எழுத வேண்டும் எனக்கு.
கற்றுக்கொள்ள
எத்தனை நேரம் மழை வீணை மீட்டியது?
மா இலைகளின் ஞாபக திரவியங்கள் என் உறக்கத்தை இலகுவாக்கும் வரை?
உறுதியற்ற ஜன்னல் கடுகடுப்பான காற்றைக் கட்டித் தழுவும் வரை?
இல்லாத என் குழந்தைப் பருவம் குறித்து நான் கனவு காண்கிறேன்
எப்படி என் விரல்கள் நிறுத்தியும் பின் செலுத்தியும் பொத்தான்களைக் கொண்டு கேட்கப்படாத மெட்டுகளை அசைத்தன
அங்கு சர்க்கரை தோய்ந்த பொய்களைக் குழந்தைகள் உச்சரித்தன, விளையாட்டு மைதானங்களில் நட்சத்திரங்கள் ஜொலித்தன.
நான் அப்பொழுது ஒரு குழந்தை, வார்த்தைகளின் மனக்கசப்பை உணர்ந்தபடி,
அறிந்துகொண்டேன் கண்ணாடியால் இழைக்கப்பட்ட மொழியை.
கண்சார்ந்த வார்த்தைகளை எனது மொழி தவறாக தாங்கி இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் நேர்கோடாக, எழுத்தின் நிழகலாக.
எனது வார்த்தைக் களஞ்சியம் பசுமையானது.
பழைய ஒளிப்பெழையின் சுருளை ஒத்தது எனது கணிதக் கற்றல்.
எனது மணிச்சட்டக உள்ளங்கைகளைப் பார்த்து நான் எனது நேரத்தைக் கடத்துகிறேன்,
மணல் துகள்களை வாசிக்க என் கண்களை ஒருக்கணிக்கிறேன்.
என் கண்ணின் மணிகள் வெளிச்சத்திற்கு அசைந்துகொடுக்கும்.
ஈரம் தோய்ந்த இசைக்கு இணங்குவது போலத்தான்
அழிக்கப்பட்ட நிலவுக்கும்.
எங்கெங்கிலும் இருக்கிறது மழை
தனிக் கவிதைகளை கற்றபடி
அதன் தைரியத்தை அனுசரித்தபடி.
அதன் பின் இணைப்பைக் கற்பனை செய்கிறேன் எனது இறுதி ஓசையில்
உறுதியான விசை மீட்டலுக்குத் திரும்பியபடி.
மொழிபெயர்ப்பாளர் முனைவர் உ. மகேந்திரன் |
மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: mahendranbefrank@gmail.com
ஒன்றிரண்டு வரிகளைத் தவிர எனக்கு கவிதை புரியவில்லை காரணம் நான் ஒரு படிம சூன்யம். எனினும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல முயற்சி ஐயா. வாழ்த்துக்கள் இதன் ஆங்கில வடிவத்தை நான் படித்ததில்லை.
பதிலளிநீக்குஎன்னை கவர்ந்த வரி என்னவென்றால் யாரோ எனது வாழ்வை பற்றி கூறும் கருத்தை எண்ணி நான் என்னை சாகடித்துவிடுகிறேன் என்ற கருத்தை வலியுறுத்திய வரிதான் அது. எனக்கு மிக அருமையாக பொருந்திய வரி. வாழ்த்துக்கள்.