அறிவிப்புகள்

விதைப்போம் அறுப்போம்

சில மாதங்களுக்கு முன்பு, பிரபல தனித் தமிழ்க் கணிமை வல்லுநர் நீச்சல்காரன் அவர்கள், பார்வையற்றோர் பயன்படுத்தும் கணினி தொழில்நுட்பம் தொடர்பாக விரல்மொழியர் குழுவோடு உரையாடினார். அதன் விளைவாகத் தமிழ்க் கணிமை மாதிரி தேர்தல் அறிக்கையில் இணையதளங்கள் அணுகல் தன்மை வசதியோடு உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைத்திருந்தார். அதைக் காண இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

இவற்றையெல்லாம் காட்டிலும் பன்மடங்கு பயனுள்ள ஒன்றைப் பார்வையற்றோர் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார். அவர் உருவாக்கிய ஓவன் எனப்படும் தமிழ் எழுத்துரு மாற்றியில் (tamil font converter) புதிதாகத் தமிழ் பிரேயில் எழுத்துருவையும் சேர்த்துள்ளார்! நீங்கள் தமிழ் ஒருங்குறியில் எழுத்துக்களை உள்ளிட்டு, தமிழ் பிரேயில் எழுத்துக்களாக மாற்றிக் கொள்ளலாம். ஓவன் எழுத்துரு மாற்றி என்பது இணையவழி எழுத்துரு மாற்றியாகும். அதைக் காண இந்த இணைப்பைச்  சொடுக்குங்கள்.

 

அவர் உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், அத்தகவலை விரல்மொழியருக்குத்  தெரிவித்து ஆலோசனைகளையும் கேட்டிருந்தார். எனவே, பிரேயில் தொழில்நுட்பத்தில் ஆழங்கால் பட்டவரான b.கண்ணன் அவர்கள் விரல்மொழியர் சார்பாக நீச்சல்காரனுடன்  உரையாடி சில ஆலோசனைகளையும் அளித்திருக்கிறார்.

நண்பர்களே! பார்வையற்றோர் தொடர்பான சகல சிந்தனைகளையும் இச்சமூகத்தில் விதைப்போம். அது யாரேனும் ஒருவர் மனதில் பற்றிப் படரலாம். பின், அது சமூகம் முழுமைக்கும் தொடரலாம். வரும் பார்வையற்ற தலைமுறை அதன் பயனை உணரலாம். 

1 கருத்து:

  1. இது போன்று தனி நபர்களால் எடுக்கப்படுகிற சிறிய முயற்சி கண்டிப்பாக பெரிய பலனை தரும் அவருக்கு கோடான கோடி நன்றிகள் இதனை ஆவணப்படுத்தி இருக்கிற உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு