அரசியலில் நாம்-17 ரா. பாலகணேசன்

 உங்கள் ஆதரவிற்கு நன்றி

 

வணக்கம் வாசகர்களே!

      கடந்த 16 இதழ்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்களிப்பு குறித்து தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பார்வையற்ற அரசியலாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தியதில் பெருமகிழ்ச்சி எனக்கு. இன்னும் அரசியல் பணி செய்துகொண்டிருக்கும் சில பார்வை மாற்றுத்திறனாளிகளை அறிமுகப்படுத்த இயலாமைக்கு வருந்துகிறேன்.

            70 வயது நிரம்பிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பேரா. சுகுமாரன் தொடங்கி, 20 வயதேயான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் உடன்பிறப்பு அகிலன் வரை வெவ்வேறு வயதினரை, வெவ்வேறு சூழல்களில் வளர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளை இத்தொடர் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

      இன்னும் பார்வையற்றோர் தி.மு. என்ற அமைப்பு செயல்பட்டது குறித்து அறிவிக்க ஆசை. .தி.மு.கவைச் சேர்ந்த பெருமாள் அவர்களையும், தி.மு.கவின் தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தில் செயல்பட்ட சவரிராஜன் அவர்களையும் இங்கு அறிமுகப்படுத்த ஆசை. பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தை நிறுவக் காரணமாக இருந்த தோழர் S.S. கண்ணன் அவர்களோடு நெருங்கிய தொடர்புடையவராகக் கருதப்பட்ட மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீரராகவன் அவர்களின் அரசியல் பங்களிப்பையும் அறிந்து வெளிக்கொணர ஆசை. இவர்களைத் தொடர்புகொண்டு பேச மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துவிட்டன.

      இன்னும் எனக்குத் தெரியாமல் பல பார்வை மாற்றுத் திறனாளிகள் அரசியல் பணியில் இருக்கலாம். அவர்களையும் நான் அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லையே!

      இதுவரை இந்தப் பகுதிக்காகப் பேசிய அனைவருக்கும், அவர்களோடு தொடர்பு ஏற்படுத்த உதவியவர்களுக்கும், படித்துக் கருத்து தெரிவித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தேவைப்படுமானால் புதிய அரசியலாளர்களை, இதுவரை இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படாதவர்களை அறிமுகம் செய்ய அவ்வப்போது இப்பகுதியைத் தொடரலாம் என்று நினைக்கிறேன். எனினும், தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எனது           இத்தொடருக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் பல அரசியலாளர்களை உருவாக்குவோம்.

graphic கட்டுரையாளர் பாலகனேசன் அவர்களின் படம்
கட்டுரையாளர் பாலகனேசன்

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

3 கருத்துகள்:

  1. அரசியலில் நாம் சாதிப்பது என்பது மிகவும் சவாலுக்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது என்பதனை உங்களின் தொடர் உணர்த்தியது. கண்டிப்பாக ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்வதற்கு அவர்களிடம் உரையாடி கருத்துக்களைப் பெற்று கட்டுரை வடிவில் தருவதற்கு நீங்கள் கடினமாக உழைத்து இருப்பீர்கள் அதில் எவ்வித ஐயமும் இல்லை அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் ஏராளமான தொடர்கள் நீங்கள் எழுதும் வண்ணம் பலர் அரசியலில் நுழைந்து நம்முடைய உரிமைகளை பெற்றுத் தருகிற இடத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்போம்!

    பதிலளிநீக்கு