இதயநாதம்
பார்வை மாற்றுத்திறனாளிகளின் இதய நாதமாய்
ஒலிக்கும் விரல்மொழியர் மின்னிதழ் குறித்து 15-08-2021 சுதந்திர தினத்தன்று
திருச்சிராப்பள்ளி வானொலியில் விரல்மொழியரின் ஆசிரியர் ரா.பாலகணேசன் அவர்கள் இதழின்
நோக்கம் குறித்தும், அது முன்னெடுக்கும் செயல்பாடுகள் குறித்தும் தெளிவாக
எடுத்துரைத்தார்.
பார்வை
குறையுடைய தமிழ் யூடியூபர்களுடன் ஓர் உரையாடல்*
பார்வையற்றோரால் தொடங்கப்பட்ட முதல்
தமிழ் கிளப் ஹவுஸ் அரங்கமான விரல்மொழியர் *பார்வை குறையுடைய தமிழ் யூடியூபர்களுடன்
ஓர் உரையாடல்* (A discussion with blind Tamil youtubers) எனும்
தலைப்பில் 22/08/2021 ஞாயிறு அன்று காலை
10 மணி அளவில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பல தரப்பட்ட யூடியூப்
சேனல் நடத்துபவர்களும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும்
எடுத்துரைத்தனர். நிகழ்வின் தொடக்கமாக நெற்றிக்கண் திரைப்படத்தில்
பார்வைமாற்றுத்திறனாளிகள் சித்திரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து விரல்மொழியரின்
தொகுப்பாசிரியர் தமிழ்மணி எடுத்துரைத்தார். இறுதியில் பார்வையாளர்கள் தெளிவான
கருத்துக்களையும் நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கி
நிகழ்வை சிறப்பித்தனர்.
விரல் மொழியர் கிளப் ஹவுஸ் அரங்கில்
இணைந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
https://bit.ly/3dfJ7xV
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக