பார்வைக் குறையுடையோர் நலனுக்காகத் தொடர்ந்து பல பயனுள்ள புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டுவரும் விரல்மொழியர் திறந்திருக்கும் இன்னொரு புதுவாசல் ‘விரல்மொழியர் தேர்வுக்களம்’. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இந்த புதுச்சேவையைத் தொடங்குகிறது விரல்மொழியர். பார்வைக் குறையுடைய மாணவர்களுக்கும், வேலை தேடுவோருக்குமான சேவை இது.
போட்டித் தேர்வுகள்தான் பெரும்பான்மையான பார்வைக் குறையுடையோரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. பல பார்வைக் குறையுடைய மாணவர்களும், வேலை தேடுவோரும் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் தாங்களே அணுகும் வகையில் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இந்தக் குறையைப் போக்கும் முயற்சியாக வருகிறது ‘விரல்மொழியர் தேர்வுக்களம்’ என்ற டெலகிராம் சேனல். விரல்மொழியர் நிர்வாகிகளின் அனுமதியோடு இந்தச் சேனலில் இணையும் பார்வைக் குறையுடைய மாணவர்களும், வேலை தேடுவோரும் இதிலிருக்கும் புத்தகங்களைத் தங்கள் கல்லூரித் தேர்வுகளுக்கோ, போட்டித் தேர்வுகளுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் PDF வடிவில் இங்கு கிடைக்கும்..
நீங்களும் கை கோர்க்கலாம்
எங்களது இந்தப் புதிய முயற்சிக்கு நீங்களும் கீழ்க்கண்ட வகைகளில் உதவலாம்.
*பார்வைக்
குறையுடைய மாணவர்களும், வேலை தேடுவோரும் தங்களுக்குத் தேவையான, பிற இடங்களில் கிடைக்காத
புத்தகங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
*மற்றவர்கள்
இத்திட்டத்திற்குத் தேவையான புத்தகங்களை நன்கொடையாக வழங்கலாம். அல்லது, புத்தகங்கள்
வாங்குவதற்கான நிதியை நன்கொடையாக வழங்கலாம். நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் எங்கள்
விரல்மொழியர் இணைய தளத்தில் குறிப்பிடப்படும்.
பார்வைக்
குறையுடைய கல்லூரி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களையும், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களையும்
நமக்கேற்ற வகையிலான அணுகலில் வழங்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக நிற்க
விரும்புகிறது விரல்மொழியர்.
வாருங்கள்
நண்பர்களே! பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு: பொன். சக்திவேல்: 9159669269
ரா. பாலகணேசன்
9894335053
மின்னஞ்சல் முகவரி: viralmozhiyar@gmail.com
அறிவுசார் பணிக்கு வாழ்த்துக்கள் விரல் மொழியர்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் விரல் மொழியர் மின்னுதல் இந்த சேவை என்னை போன்ற கல்லூரி மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் விரல் மொழியர் அன்பு உறவுகளே நிர்வாகிகளே உங்களின் சேவை தொடரட்டும் எங்களைப் போன்றோர் பயன்பெற்று சிறப்பாக வாழ்விலே நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு நீங்கள் செய்கின்ற பணி சிறக்கட்டும் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்கு